Amma kavithaigal - mother kavithaigal - mom kavithaigal - thai kavithaigal


பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம்
மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக்

கேட்டாலும் கொடுத்தாலும்

கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள்
கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே..


Amma kavithaigal - mother kavithaigal - mom kavithaigal - thai kavithaigal

Amma kavithaigal - mother kavithaigal - mom kavithaigal - thai kavithaigal



அம்மா!


எனக்கேதும்
ஆச்சுதின்னா உனக்கு வேறு
பிள்ளையிருக்கு. ....

உனக்கேதும் ஆச்சுதின்னா
எனக்கு வேறு தாயுண்டா!




Amma kavithaigal - mother kavithaigal - mom kavithaigal - thai kavithaigal

Thai Kavithai

அம்மா!! எதையோ நினைத்து
நீ பலமுறை கண் கலங்கிய
போதும் நான் ஒருமுறை கூட
ஏன் என்று கேட்டதில்லை.

ஆனால்.. ?

தூசியால் நான் ஒருமுறை
கண் கலங்கிய போது
நீ பலமுறை காரணம்
கேட்டு துடித்து போனாயம்மா...



thai mother mom kavithai



வானளவு உயர்ந்த உள்ளம்
கடலளவு ஆழ்ந்த கருணை
வெறுப்பை காட்டாது
அன்பை மட்டுமே
அள்ளிக் கொடுக்கும்
அமுதசுரபி  அம்மா ...!!!


Thai kavithai MOM

Amma kavithai

 
அம்மா....!!!
நான் இப்போதெல்லாம்
உன்னை அடிக்கடி நினைக்கின்றேன்....
நான் நொடிப்பொழுதும் தவறாமல்
நினைத்துக்கொண்டிருந்தவர்கள்
எல்லாம் என்னை மறந்து போனதால்...!!!!

 
அன்பை சொல்ல
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்..அன்பாய்
சொல்ல தாய் போல்
எந்த உறவுமில்லை.......!!!!

amma kavithai

Amma(அம்மா) Kavithai



1. Amma(அம்மா) Kavithai

உனக்காய் துடித்த ஓர் இதயம்.!
உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்.!
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்.!
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்.!
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்.!
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்.. !

அம்மா

2. Amma(அம்மா) Kavithai

ஒரு எதிர் பார்ப்பும் இல்லாத உறவு இவ்வுலகில் ஒன்று இருக்குமானால் 
அது தாய் உறவு மட்டுமே...

3. Amma(அம்மா) Kavithai

அம்மா அப்பாவின் அன்பிற்கு நிகராக நம்மீது 
ஒரு அன்பு கிடைக்குமெனில் 
அது தாத்தா பாட்டியின்
அன்பே

4. Amma(அம்மா) Kavithai

குழந்தையின் அழுகுரல்
வாத்தியாரின் அதட்டல்
இளஞனின் விசில்
தாயின் தாலாட்டு


சிற்பியின் உளியில்

சில்வண்டின் சலசலப்பு
உறக்கத்தில் குறட்டை
உண்ணும் போது விக்கல்

எத்தனை ஓசை இருந்தென்ன லாபம்

கருவறை உறக்கத்தை கலைக்காமல் எனக்காய்
கவி பாடிய என் தாயின் இதய துடிப்பு அல்லவா ஓசை!

5. Amma(அம்மா) Kavithai


வீட்டில் உள்ள பொருளை

"அம்மாவால்"
கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்
"அது"
தொலைந்து விட்டதாக அர்த்தம்

6. Amma(அம்மா) Kavithai


அம்மா


கடைசி தோசை சாப்பிடும் போது,
சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து

சட்னியை காலி செய்ய சொல்லி,
இன்னொரு தோசை வைக்கிறதுதான் அம்மாவின்
பாசம்.

7. Amma(அம்மா) Kavithai


அப்பாவின் கோர்ட்டில்

குற்றவாளியாக
நாம் நிறுத்தப்படும் போதெல்லாம்
எப்பொழுதும் பிள்ளைகளின் சார்பாக
வாதிடும் வக்கீலாக அம்மா
முடிவில்
அவ்வழக்கே தள்ளுபடி செய்யப்படுகிறது .

8. Amma(அம்மா) Kavithai

தந்தையின் தோள் மீது அமர்ந்து காணும் உலகமும், 
தாயின் இடுப்பில் அமர்ந்து காணும் உலகமும் வெவ்வேறானவை...

9. Amma(அம்மா) Kavithai


ஆயிரம் நிலவுகள்

வாழ்வில்
வந்து மறைந்தாலும்
ஒற்றை சூரியனாய்
என்று பிரசாகம் வீசம்
அம்மா உன் அன்பு 


10. Amma(அம்மா) Kavithai


ஒவ்வொரு வலிகளிலும் 

அன்னையின் மடியை 
தேடுகிறது இதயம் !
அன்னையை தவிர இந்த 
உலகத்தில் உண்மையான 
பாசம் வைக்க வேறு
ஆள் இல்லை !

Amma Kavithai dedicated to MOM